சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் லேசா லேசா. இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. கூட்டத்தில் ஒருத்தராக இருந்த த்ரிஷா தனது கடின உழைப்பினால் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இன்று உச்ச நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் த்ரிஷா கால்தடம் பதித்து கலக்கி வருகிறார். கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்துள்ள இவர் அண்மையில் வெளியான லியோ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது நடிகர் அஜித் உடனும் த்ரிஷா விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், திடீரென படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னை வந்து உள்ளார். இதனால் அவர் படப்பிடிப்பில் இருந்து சண்டைபோட்டு வெளியேறிதாக கூறப்பட்ட நிலையில், விளம்பர ஷூட்டிங்கிற்காக அவர் தற்போது சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.