“கண்டிஷனுக்கு ஒத்து வரல…25 கோடியை திருப்பி கேட்கும் நெட்பிலிக்ஸ்

வெளியிட்டது

15 ஆண்டுகள் முன் அறிமுகமாகி இப்பொது வரையிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியா சினிமாவை இப்பொது வரையில் தன்னுடைய கண்ட்ரோலில் வைத்துள்ள அவர், கடந்த ஜூன் மாதம் நீண்ட கால காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமண செய்து கொண்டார். சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்று முடிந்தது.

"கண்டிஷனுக்கு ஒத்து வரல...25 கோடியை திருப்பி கேட்கும் நெட்பிலிக்ஸ் 1

பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்றால் எப்போதும் மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது வழக்கமே. ஆனால் நயந்தாரா திருமணத்தால் எந்த வித ஒரு சின்ன கசிவும் இருந்து விட கூடாது என்பதற்காக வருபவர்களுக்கு கூட போன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய பெரிய செலிபிரிட்டிகளிடமும் இது கடைபிடிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் தங்களது திருமண நிகழ்வை ஒளிபரப்ப தனியார் OTT தளமான நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கு தொகையாக 25 கோடி அந்த நிறுவனம் சார்பில் அளிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொது அவர்கள் திருமணம் முடிந்து ஒருமாத காலமாகியும் அந்த நிறுவனம் சார்பில் எந்த வித அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் பொது எடுக்கப்பட்ட போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நெட்டபிலிக்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாகவே தன்னிச்சையாக அவர் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, செக்யூரிட்டி, ஒருவருக்கான திருமண உணவு செலவு என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம். இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா உலகம் கேள்விப்பட்டதில்லை. இப்பொது கணவன் மனைவி இருவரும் தன்னிச்சையாக செயல்ப்பட துவங்கியதால் நெட்டபிலிக்ஸ் நிறுவனம் வேறுவழியின்றி தங்கள் கொடுத்த 25 கோடி படத்தை திருப்பி அனுப்பும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருகின்றன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்