அதிவேகமாக பைக் ஓட்டிய பிரபல youtuber டிடிஎஃப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீடியோ வெளியிட்டு டிடிஎஃப் வாசன் கதறி உள்ளது தற்போது வைரலாகி இருக்கிறது. கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது, சாகசம் செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவு செய்து தனது youtube சேனலில் பதிவு செய்து வருவது வழக்கமாகி இருந்தது. அண்மையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அனுமதி இன்றி அதிக அளவில் இளைஞர்களை கூட்டியதால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 240 கிலோமீட்டர் வேகத்தில் வாசல் இருசக்கர வாகனத்தை இயக்கியது இணையத்தில் பரவியது. இதையடுத்து இதுபோல் இனி வேகமாக பைக்கை ஓட்டக்கூடாது என அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மற்றொரு youtuber gp முத்துவுடன் கோவை அவிநாசி சாலை, மற்றும் திருச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் டிடிஎஃப் வாசன் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காட்சிகள் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியானது. இந்த காட்சிகளில் பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து தலைக்கவசம் அணியாமல் பயத்தில் கதறிக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீஸ், அதிவேகமாகவும், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தான வகையிலும் அவர் வாகனம் ஓட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தான் இப்பதான் வளர்ந்து வருகிறேன் அதற்க்குள் என் வாழ்க்கையை முடித்து விட வேண்டாம்..! எனக்கு 22 வயது ஆகிறது நான் இன்னும் நிறைய வளர வேண்டும் என்று நினைக்கிறேன். ஜிபி முத்துவுடன் எடுக்கப்பட்ட வீடியோ காமெடியாக எடுக்கப்பட்டதே தவிர சீரியஸ் ஆக எடுக்கப்பட்டது இல்லை என்றும், இதற்காக வாசனை கைது செய்ய வேண்டும், அவரது டிரைவிங் லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசாதீர்கள் எனக்கு மனது ரொம்ப வலிக்கிது என் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டு கொண்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Twin Throttlers