பிரபல பைக் ரேஸரான டிடிஎஃப் வாசன் தற்போது லைவில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இவரது பேச்சுக்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். யூட்யூபில் பைக் ரேஸ் சாகசங்கள் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு பல லட்சம் இளைஞர்களை தன்வசப்படுத்தி இருக்கும் ஒரு நபர்தான் டிடிஎஃப் வாசன். இவர் கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். 21 வயதே ஆன டிடிஎஃப் வாசன் பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோவை தான் தற்போது டிடிஎஃப் வாசன் வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் கடலூருக்கு சென்ற அவர் ஒரு அலுவலகத்தின் திறப்பு விழாவிற்காக சென்றிருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் கூடினர். மேலும் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து ஒலி எழுப்பிக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் ஊர்வலமாக சென்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை கவனித்த போலீசார் இருசக்கர வாகனங்களில் வேகமாக வந்தவர்களையும் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் சென்றவர்களையும் புடித்து அடிக்க தொடங்கினர். மேலும் வாசனை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இருந்தபோதிலும் தொடர்ந்து ஊர்வலம் சென்று கொண்டிருந்ததால் அண்ணா மேம்பாலம் அருகே வரும் பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இருசக்கர வாகனங்களை மடக்கி அதை ஓட்டி வந்த இளைஞர்களை வெளுத்து வாங்கினர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தும் வசூல் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டனர். இதைப் பார்த்த வாசன் முதலில் காவலர்கள் மீது எந்த தவறும் இல்லை ,ஹெல்மெட் போடாமல் வந்தவர்களைத்தான் அவர்கள் பிடித்தார்கள் என்று பேசினார்.
தற்போது லைவில் பேசியிருக்கும் டிடிஎஃப் வாசன் காவல்துறையினர் தன்னிடம் பொய் சொல்லிவிட்டார்கள். நம்மை விரட்டிய போலீஸ்காரர்களே நம்மை ராஜ மரியாதையுடன் உட்கார வைப்பார்கள். இது நான் வெறும் வாய் வார்த்தைக்கு சொல்வதல் நம் மீது ஐந்து வழக்குப் போட்டு இருக்கிறார்கள் இதற்காக வருத்தப்படலை. நமக்கு கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடையில் கட்டைப் பை வாங்குற மாதிரி, என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிடுவேன். ஆனா பசங்க மேல கை வச்சுட்டாங்க நான் இது குறித்து போலீஸிடம் கேட்டபோது அவர்கள் தான் கல் எடுத்து அடித்தார்கள் என்று என்னிடம் போலீஸ் பொய் சொல்லி விட்டார்கள். இதனால் நான் செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் என்கிற பிராண்டை உருவாக்கப் போகிறேன். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்றெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை வேறு திசைக்கு அழைத்துச் செல்கிறார் என்று டிடிஎஃப் வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. பணம் அதிகமாக கொட்டுகின்ற காரணத்தினால் உயர் ரக பைக்குகளை வாங்கிக் கொண்டு அதை சாலைகளில் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு பல 2க் கிட்ஸ்களின் ஆசையை டிடிஎப் வாசன் தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு இணைய நெட்டிசன்களால் முன்வைக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. நீங்களும் அவர் பேசிய அந்த வீடியோவை காண.. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Twin Throttlers