ச்சை.! சில்ற தனமா கேள்வி கேக்குறான்.! லைவ் வீடியோவில் கதறிய TTF.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

நேற்று பேட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய டிடிஎஃப் வாசன் தற்போது பேட்டி எடுத்தவரை சில்ற மாதிரி இருக்கானுங்க என்று பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2K கிட்ஸ்களின் மனம் கவர்ந்த யூடியூபராக இருப்பவர் பிரபல பைக் ரேஸ்ரான டிடிஎஃப் வாசன். இவர் இந்தியா முழுவதும் தனது பைக்கில் பயணித்து அதை வீடியோவாக வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. பைக் ஸ்டண்டுக்கு மத்தியில் அவர் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் நாளடைவில் வைரலாகத் தொடங்கியது. இதன் பின்னர் 2K கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறிப் போனார். ட 22 வயதான டிடிஎஃப் வாசன் பைக்குகளில் 200 கிலோமீட்டருக்கும் அதி வேகமாக சென்று வீடியோவாக எடுத்துப் போடுவது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பெரும்பாலானவர்கள் அதை எதிர்க்கத் தொடங்கினர். இது இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துவதாக குற்றம் சாட்டினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ச்சை.! சில்ற தனமா கேள்வி கேக்குறான்.! லைவ் வீடியோவில் கதறிய TTF.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

இந்த நிலையில் சமீபத்தில் கடலூருக்கு வந்த அவரைப் பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்தனர். மேலும் பைக்கில் அதிவேகமாக ஒலி எழுப்பி கொண்டு அதிவேகமாக செல்ல தொடங்கினர். இதனால் விபத்து ஏற்பட்டு பலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனால் கடுப்பான காவல் துறை 200-க்கும் மேற்பட்ட பைக்குகளை மறித்து வண்டியை ஓட்டி வந்தவர்களை அடித்து வெளுத்தனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பேசிய டிடிஎஃப் வாசன. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக காவலர்கள் தன்னிடம் பொய் சொல்லி தன்னுடைய ரசிகர்களை அடித்து விட்டதாக கூறினார். மேலும் கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடையில் தனக்கு கட்டைப்பை வாங்குவது போல என்றும் அவர் பேசியிருந்தார். எந்த போலீஸ் நம்மை அடித்ததோ அவர்களே ராஜமரியாதையுடன் நம்மளை அமர வைக்கும் நாள் விரைவில் வரும் என்று டிடிஎஃப் வாசன் வீடியோவில் பேசி இருந்தார்.

தொடர்ந்து இது போல் பக்குவம் இல்லாமல் பேசி வரும் வாசனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பேட்டி ஒன்றை அளித்திருந்த டிடிஎஃப் வாசனிடம் இது குறித்து எல்லாம் கேள்வி கேட்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாத வாசன் மைக்கை கழற்றி எறிந்து விட்டு பேட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். இந்த பேட்டியை எடுத்தவர் பிரபல நெறியாளர் ஐயப்பன் ராமசாமி. இவர் அரசியல்வாதிகளே கேள்விகளால் மடக்குபவர். இந்த நிலையில் வாசன் ஐயப்பனிடம் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு கட்டத்தில் விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்த பிறகு நீங்கள் ஒரு கேள்வி இரண்டு கேள்வி என்றால் பரவாயில்லை கேட்கும் அனைத்து கேள்வியுமே சர்ச்சையாக இருக்கிறது. எனவே பேட்டியில் இருந்து வெளியேறுகிறேன் என்று பாதியிலேயே மைக்கை பிடுங்கி எறிந்து விட்டு பேட்டியில் இருந்து வெளியேறினார்.

வெளியே வந்த பின்னர் லைவ் வீடியோவிற்கு வந்த அவர் நான் உலக சாதனை ஒன்று செய்திருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி அந்த பேட்டி எடுப்பவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அவருடைய சேனலுக்கு நன்றாக பார்வையாளர்கள் வரவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து சர்ச்சையான கேள்விகளை கேட்டார். ஒரு கேள்வி இரண்டு கேள்வி என்றால் பரவாயில்லை பேட்டி முழுவதும் தொடர்ந்து சர்ச்சையான கேள்விகளே கேட்கப்பட்டது. நான் சரியான பதிலை சொன்ன போதிலும் அவர் கேள்வியை உடனே மாற்றி விடுகிறார். ச்சை சில்லறை மாதிரி இருக்கானுங்க, எத்தனையோ சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறேன் ஆனால் இது போல ஒரு மோசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை என்று நெறியாளரையும் அந்த youtube சேனலையும் திட்டி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பின்னர் வாசனை நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்