TTF வாசனுக்கு அடுத்த பேரிடி.! வீடியோ வெளியிட்டு புலம்பிய வாசன்.! என்ன தம்பி இதுவும் போச்சா.?

வெளியிட்டது

2K கிட்ஸ்கள் மத்தியில் மிகப் பிரபலமான யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசனுக்கு தற்போது அடுத்ததாக புது சிக்கல் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றம் அளித்த உத்தரவு தற்போது வாசனுக்கு அடுத்த பேரிடியாக அமைந்திருக்கிறது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் 21 வயதான இளைஞரான டிடிஎஃப் வாசன் தனது சொந்த உழைப்பால் எதையும் செய்யாமல், தனது குடும்பத்தில் செழிப்பில் உயர்ரக பைக்குகளை வாங்கி அதை மக்கள் செல்லும் பாதைகளில் வேகமாக ஓட்டி வீடியோவாக எடுத்து பதிவிட்டதன் மூலமாக பிரபலமானவர். இவருக்கு 2K கிட்ஸ்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கினர். தொடர்ந்து வாசனை சுற்றி சர்ச்சைகளும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TTF வாசனுக்கு அடுத்த பேரிடி.! வீடியோ வெளியிட்டு புலம்பிய வாசன்.! என்ன தம்பி இதுவும் போச்சா.? 1

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர், காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கை வேகமாக ஓட்டி பயங்கர விபத்திற்கு உள்ளானர். இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக அவர் வாகனம் ஓட்டுவதாக கூறி அவரை கைது செய்து சில காலம் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், “இனி சர்வதேச லைசன்ஸ் எடுத்து விட்டு பைக் ஓட்டுவேன் ,தொடர்ந்து படத்திலும் நடிப்பேன், என்னுடைய பேஷனை எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டிக்கு பின்னர் பைக் எதுவும் தொடாமல் சைக்கிள்ல மட்டும் ஓட்டி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் பைக் ஓட்ட தான் கூடாது ஆனால் உட்கார்ந்து பார்க்கலாம் என்று சொல்லி பைக்கின் மீது அமர்ந்திருப்பது போல வீடியோக்களையும் வெளியிட்டார்.


தொடர்ந்து சர்ச்சைகள் சுற்றி அடித்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சர்வதேச லைசன்ஸ் வாங்கி வெளிநாட்டில் பைக் ஓட்டுவேன் என்று சொன்னேன், ஆனால் பத்திரிகையாளர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு மாற்றிப் போட்டுவிட்டார்கள், விரைவில் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கும் வேலைகளை தொடங்க இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வாசனுக்கு அடுத்த பேரிடியாக அவர் நடத்தி வரும் youtube சேனலை முடக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுவர்களை தவறான முறையில் வழிநடத்துவதாக காவல்துறை அளித்த புகாரின் பேரில் நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இணையதளப் பக்கம் விரைவில் முடக்கப்படுகிறது.


இதனால் இந்த சேனலை கைவிட்டு விட்டு புது சேனலை தொடங்க இருப்பதாக டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். நீங்களும் அவரின் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Twin Throttlerz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்