விஜய் தொலைக்காட்சியில் சிறிய சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகியவர் தங்கதுரை. பின்னர் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பலரையும் சிரிக்க வைத்து பிரபலம் ஆகினார். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறது. பலரும் தன்னை கலாய்த்தாலும் அதன் மூலம் பிறரை சிரிக்க வைப்பது தங்கதுரை வல்லவர். தற்போது சின்னத்திரையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க தொடங்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கி உள்ளார் தங்கதுரை. அண்மையில் ரஜினியின் லால் சலாம் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்குபெற்று அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் தங்கதுரை. இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் தங்கதுரை தற்போது புதியதாக பிஎம்டபிள்யு காரை வாங்கி உள்ளார். காரை வாங்கிய முதல் நாளே இவர் தனது பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளை அழைத்து ரைடு சென்றுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு புதிய உடைகள் மற்றும் உணவுகள் வாங்கி கொடுத்து மகிழ்ந்து உள்ளார். இந்த வீடியோவை தங்கதுரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கதுரையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.