Categories: உலகம்

லாவோஸ் நாட்டில் இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்!!

வெளியிட்டது
லாவோஸ் நாட்டில் இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்!! 1

லாவோஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் தாய்லாந்து நாட்டின் எல்லை அருகே இன்று காலை 6.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது . இது ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகி இருந்தது . இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

ஆனால் இந்நிலநடுக்கம் 700 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . போப் பிரான்சிஸ் அந்நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.தாய்லாந்து நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், பாங்காக் மற்றும் புறநகர் பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோன்று வியட்னாம் நாட்டின் தலைநகர் ஹனோய் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மேற்கூரையில் உள்ள விளக்குகள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்ததோடு சாலையில் தஞ்சம் புகுந்தனர். பல அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் 24வது தளம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன் 5.7 அளவிலான நிலநடுக்கம் லாவோசில் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. போப் பிரான்சிஸ் நேற்று பாங்காக் நகருக்கு வந்தடைந்து உள்ளார். அவர் இன்று நடைபெறும் கூட்டமொன்றில் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இதன்பின் அந்நாட்டு அரசரையும் சந்திக்கிறார். பின்னர் இன்று மாலை கூட்டம் ஒன்றையும் நடத்துகிறார். அவர் இந்நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளாரா? என்று கேட்கப்பட்டதற்கு அவருடன் வந்த குழுவினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்