“நான் டானா இல்ல நீங்க டானானு போட்டி போயிட்டே இருந்துச்சு”!!”ஆனா இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் யாரு உண்மையான டான்னு”!! டான் பட சக்ஸஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய உதயநிதி.

வெளியிட்டது

கடந்த மே 13ஆம் தேதி சிவகார்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன், சிவாங்கி ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையமைத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான படம் “டான்”. முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் அப்பா-மகன் செண்டிமெண்ட் என அனைவரையும் நிகழ வைத்து படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இரண்டாம் பாதி கடைசியில் வரும் செண்டிமெண்ட் காட்சிகள் மிகவும் உருக்கமாக அமைய ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர்.

"நான் டானா இல்ல நீங்க டானானு போட்டி போயிட்டே இருந்துச்சு"!!"ஆனா இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் யாரு உண்மையான டான்னு"!! டான் பட சக்ஸஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய உதயநிதி. 1

டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவாவின் 2வது 100 கோடி வசூல் படமாக இது அமைந்துள்ளது. டாக்டர் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, கலகலப்பான படமாக இது அமைய இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 15 படங்களுக்குள்ளாகவே அவர் இவ்வாறு 2 படங்களை 100 கோடிக்கு மேல் வசூல் பெற செய்தது மிக பெரிய விஷயமாகும். இது அவருடைய வளர்ச்சியையும், மக்களிடம் கொண்ட அபிமானதாயும் குறிக்கிறது.

படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகிய நிலையில், இப்பொது அந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, விநோயோகிஸ்தர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் முதலானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி, “நான் இங்கு இரண்டு உண்மைகளை கூற வேண்டும். அதில் முதலாவது இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு, என்னுடன் இருந்தவர்களிடம் இதற்கு சிரிப்பு வருகிறதா என கேட்டேன். முதல் பாதி பார்த்து விட்டு கொஞ்சம் யோசித்தேன், ஆனால் இரண்டாம் பாதியில் இறுதி ஒரு மணி நேரத்தில் இருந்த அப்பா மகன் செண்டிமெண்டை பார்த்துவிட்டு படம் உடனே அருகில் இருந்தவர்களிடம் கண்டிப்பா படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என கூறினேன். இன்று டாக்டர் படத்தின் வசூலை மூன்றே வாரங்களில் கடந்துவிட்டது என தெரிவித்தார்.

மேலும், “இரண்டாவது உண்மை, இந்தப் படம் முதலில் எனக்குதான் வந்தது. கதை புடிக்காமல் நான் வேண்டாம் என கூறவில்லை. படத்தில் பள்ளி மாணவனை போல நடிக்க வேண்டி இருந்தது, ஆனால் நான் பள்ளி மாணவனாக நடித்தால் நன்றாக இருக்காது என தவிர்த்துவிட்டேன். அதே போல செண்டிமெண்ட் காட்சிகள் எனக்கு செட் ஆகியிருக்காது. இரண்டாம் பாதியின் கடைசியில் வரும் காட்சிகளில் சிவா நடித்ததை போல கண்டிப்பாக என்னால நடித்திருக்க முடியாது, நல்லவேளை சிபி நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் என நகைச்சுவையாக கூறினார் உதயநிதி.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட, உதயநிதியின் “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் படம் மூன்றே வாரங்களில் 125 கோடியை தாண்டி வசூல் கொடுத்துள்ளது என அறிவித்துள்ளது. வெளியிட்ட அனைத்து இடங்களிலுமே படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல “நெஞ்சுக்கு நீதி” படத்தின் வெற்றிக்கும் இப்போது வெளியாகி மிக பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள “விக்ரம்” படத்திற்கும் நன்றிகளை உதயநிதி தெரிவித்து கொண்டுள்ளார்.

Video Courtesy – ThiCinemas

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்