மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததையடுத்து தற்போது மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் வடிவேலுவை அவரது வீட்டிற்க்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றனர். மேலும் ரியல் மாமன்னான அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது மாமன்னன் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் திரைத் துறையில் இருந்து விலக முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் தான் தனக்கு கடைசி திரைப்படம் என்று அறிவித்திருந்தார். இதனால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனித் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் வடிவேலு அதே கட்சியைச் சேர்ந்த உயர் சாதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளரால் எப்படி துன்புறுத்தப்படுகிறார் என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்,த் உலக நாயகன் கமலஹாசன் என பல முன்னணி நடிகர்களும் நேரில் பார்த்துவிட்டு வாழ்த்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரி செல்வராஜை நேரில் அனைத்து சமத்துவத்தை வலியுறுத்தும் இது ஒரு அருமையான படம் என்று வாழ்த்தி இருந்தார். மேலும் வசூலிலும் சுமார் 45 கோடி வசூலை பெற்றிருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று மாமன்னன் படக்குழுவினர் வடிவேலுவை நேரில் சந்தித்து இருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி படக்குழுவினர் கௌரவித்திருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
வீடியோவை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின், “தன் எதார்த்தமான மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனை படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும் நன்றியையும் தெரிவித்தோம்” என்று பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O