ரசிகர்களால் மிகவும் எதிர்பார்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை கொடுத்த படம்தான் பீஸ்ட். இளைய தளபதி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்தது பீஸ்ட் படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் அரபிக் குத்து என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்து இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்து இருந்தது.

அடுத்த பாடலாக விஜய் குரலில் ஜாலியோ ஜும்கானா வெளியாகி அதுவும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இது போல இரண்டு பாடல்களும் வெளியான சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களக கடந்து இருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. ஆனால் படம் வெளியான பின்பு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இயக்குனர் நெல்சனை நெட்டிசன்களும், தளபதி ரசிகர்களும் வறுத்து எடுக்க ஆரம்பித்துவிட்டனர். Youtube Video Code Embed Credits: Thanthi Tv
ஆனால் பீஸ்ட் பட வசூல் குறித்து அதன் விநியோகதஸ்தரான உதயநிதி ஸ்டாலின் புது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் சில படங்களை கூற, அது வெற்றிப் படமா இல்லை தோல்வி படமா என்று உதயநிதி கூறுகிறார். பீஸ்ட் படம் குறித்து பேசும் போது அது “மிகப்பெரிய வெற்றிப்படம்” என்று பதில் அளிக்கிறார். அவரின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் ரசிகர்கள் விநியோகஸ்தர் உதயநிதியே படம் மிகப் பெரிய வெற்றி என்று கூறிவிட்டார் என்று உதயநிதியின் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..