உலகநாயகனை தெரியாதவர்கள் சினிமா ரசிகர்களாகவே இருக்க முடியாது எனலாம், அந்த அளவுக்கு தனது நடிப்பால் மிகப்பெரிய இடத்தை சினிமாவில் பிடித்து இருக்கிறார் கமல்ஹாசன். பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்து உலகநாயகனாக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த விக்ரம் பாடம் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது. தமிழ் சினிமா கீழே கிடந்த நாட்களில் வெளியான இப்படம் மீண்டும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து உள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில், அந்த படம் நல்ல வரவேற்பினை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்,தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் தன்னை உலகநாயகன் என்று இனி அழைக்க வேண்டாம் என கூறி உள்ளார். அதற்கு பதிலாக தன்னை கமல்ஹாசன் என்று அழைக்க வேண்டும் இல்லையென்றால் KH என அழையுங்கள் என கூறி உள்ளார்.