Categories: சினிமா

நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.?? குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!

வெளியிட்டது

தனுஷை பிரிவதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது அதிகாரப்பூர்வமாக மனு செய்திருப்பதாக ட்விட்டர் பிரபலமும் சென்சார் போர்டு மெம்பெருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்திற்கு இருவரும் விண்ணப்பித்து இருப்பதாக அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தன்னைவிட வயது அதிகமாக இருந்த போதிலும் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக ஜனவரி 2022 ஆம் ஆண்டு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தனர். இருந்தபோதிலும் இருவரும் அதிகாரப்பூர்வ விவாகரத்திற்கு விண்ணப்பிக்காமலே இருந்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.?? குண்டை தூக்கி போட்ட பிரபலம்.! 1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவ்வப்போது மகன்களை மட்டும் அப்பாவை பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறார். மகன்களும் அவ்வப்போது சென்று தனுஷை பார்த்துவிட்டு மீண்டும் ஐஸ்வர்யாவிடமே வந்துவிடுகின்றனர். சமீபத்தில் தனுஷ் போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகிலேயே புது வீடு ஒன்றை கட்டியிருந்தார். அந்த புகைப்படங்கள் கூட வெளியாகியிருந்தது. ஆனால் அந்த புகைப்படத்தில் தனுஷின் மகன்கள் யாருமே இல்லாதது தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. புது வீடு கட்டிய பிறகு அவர் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த சமிக்கைகளும் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்கிற படத்தை இயக்க இருக்கிறார். அதேபோல் தனுஷும் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சில காலமாக இவர்கள் இருவரின் விவாகரத்து குறித்தும் எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ட்விட்டர் பிரபலம் புதிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.


ட்விட்டர் பிரபலமும் சென்சார்டு போர்டு மெம்பருமாக இருக்கும் உமர் சந்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்திற்கு சிவில் கோர்ட்டில் விண்ணப்பித்திருக்கின்றனர். தனுஷ் வேறு ஒரு பெண்ணிற்காக ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் கூறிய இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்