Categories: சினிமா

தனுஷ் குரலில் வா வாத்தி பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதோ வெளியானது தனுஷ் வெர்ஷன் ஆல்பம்.!

வெளியிட்டது

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள வாத்தி படத்தில் இருந்து வா வாத்தி என்கிற பாடலை தற்போது தனுஷ் பாடியிருக்கிறார். அந்த வீடியோவை தற்போது படக் குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழில் முண்ணனி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தனுஷ். ஆரம்பத்தில் பலராலும் உருவக்கேலி செய்யப்பட்டார். ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் முத்திரை பதித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நடிகராக உருவெடுத்து இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் வாத்தி. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்த படம் உருவாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் குரலில் வா வாத்தி பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதோ வெளியானது தனுஷ் வெர்ஷன் ஆல்பம்.! 1
இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடன் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் சுமார் 51 கோடி வசூலை பெற்றிருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்ட போதும் குடும்பம் குடும்பமாக சென்று இந்த படத்தை பார்த்து வருகின்றனர் தனுஷின் ரசிகர்கள். இந்த படத்தில் “வா வாத்தி” ஒரு முக்கிய பாடலாக இருந்தது. அந்த பாடலை தற்போது தனுஷ் பாடி இருக்கிறார் தனுஷ். நடிப்பது மட்டுமில்லாமல் சினிமா, தயாரிப்பது, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என்று பன்முக திறமையாளராக வலம் வருகிறார்.

தனுஷ் படங்களில் எந்த பாடல்கள் வந்தாலும் அந்த பாடலை தனுஷ் குரலில் ஒரு முறை பாடி அதை ஆல்பமாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தான் தற்போது வாத்தி படத்தில் “வா வாத்தி” என்கிற பாடல் மிக பிரபலமாக இருந்த நிலையில் தற்போது தனுசும் அந்த பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி இருக்கிறது. நீங்களும் அந்த பாடலை கேட்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Aditya Music Tamil 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்