நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த இயக்கிய, விஜய் நடிப்பில் 1997ஆம் ஆண்டில் வெளியான “நேருக்கு நேர்” படத்தின் மூலம் காதல் நாயகனாக அறிமுகமானார். படம் வெற்றியை பெற்ற போதிலும் சூரியா பெரிதாக கவனிக்கப்படவில்லை. பின்னர் “காதலே நிம்மதி”, “சந்திப்போமா” என சில படங்கள் நடித்தாலும், முதல் வெற்றியாக இவருக்கு அமைந்தது “பூவெல்லாம் கேட்டுப்பார்” படமே. அதே ஆண்டு மீண்டும் ஜோதிகாவுடன் “உயிரிலே கலந்தது” படத்தில் நடித்தார். இரண்டுமே நல்ல வெற்றியை பெற்றது. video given below.

மீண்டும் விஜயுடன் ஃப்ரண்டஸ் படத்தில் நடித்தார். இதுவும் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான “நந்தா” படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. படம் மிக பெரிய வெற்றியை கொடுக்க, அதன் பின் அவர் நடித்த “உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆறு, வேல், ஜில்லுனு ஒரு காதல், பிதாமகன், மாயாவி, கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம், சிங்கம் 2, சூரரை போற்று, ஜெய் பீம்” போன்ற பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை அவர் 4 முறை ஃபிலிம் பேர் அவார்ட் என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.
அண்மையில் நடிகர் கமலின் “விக்ரம்” படத்தின் கடைசி 5 நிமிட காட்சிகளில் வந்து மொத திரையரங்கையும் அலறவிட்டார் சூர்யா. ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து போனார்கள். அடுத்தத்தக்க வரும் விக்ரம் 3, கைதி 2 என இரண்டு படங்களிலும் சூர்யா முக்கிய வேடத்திலும் அதுவும் வில்லனாக மிரட்டவுள்ளார் என ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார்.
சூர்யா அடுத்து பாலாவுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் வாடிவாசல் என இரண்டு பெரிய படங்களில் நடித்துவருகிறார். டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியை தொடர்ந்து கோவாவில் ஜுலை மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யா. வாடிவாசல் படத்தின் ஃபிரிலிமினரி போட்டோஷுட் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஷுட்டிங்கை துவக்க போவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் ட்ரீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை மாதத்தில் வாடிவாசல் படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிட போகிறாரா்களாம். கடந்த ஆண்டு சூர்யா பிறந்தநாளன்று எதற்கும் துணிந்தவன் டீம் படத்தின் டீசரை வெளியிட்டது. அது போல இந்த முறை வாடிவாசல் டீம் முடிவு செய்திருக்கிறதாம்.
நேற்று தேசிய விருதையும் சூர்யா வென்றுள்ளதால் அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள் குவிந்தது வருகின்றன.இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படக்குழு ஒரு சிறப்பு டீசரை வெளியிட்டள்ளது. நடிகர் சூரியா இதில் பிரதேயேகமாக அமைக்கப்பட்ட கூடத்தில் ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி கலைகளுடன் மோதியுள்ளார். இந்த விடியோவை தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார்.
Video Courtesy – Kalaipuli S thanu