சமீப காலமாக வம்சி படத்தில் இருந்து தொடர்ந்து காட்சிகள் வெளியாகி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. விஜய் நடிக்கும் வம்சி படத்தின் சில காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார் நடிகர் விஜய். இவர் இவரது தந்தை இயக்கத்தில் 1992ம் ஆண்டில் வெளியான படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். பின்னர் கடுமையான உழைப்பு மற்றும் நடிப்புத் திறமையால் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.

விஜய் தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படமும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படமான தளபதி 66 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு வெளியாகி இருந்தது. கோர்ட் சூட்டுடன் விஜய் அமர்ந்திருப்பது போலவும், பின்னாடி கண்ணாடிகளால் ஆன அறை போலவும் இருந்தது. படத்தின் பெயர் வாரிசு என்று அறிவிக்கப்பட தளபதி ரசிகர்கள் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து கொண்டாடி வந்தனர்.
சமீப காலமாக வம்சி படத்தில் இருந்து தொடர்ந்து காட்சிகள் வெளியாகி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சரத் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போலவும், அவருடன் விஜய் ஓடி வருவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் பிரபுவும் இருக்கிறார். அதை யாரோ மொபைலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாரிசு படத்தின் காட்சிகள் வெளியாவதால் இயக்குனர் வம்சி மீது விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.