இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “சந்தானம் சின்னப் பையனாக இருக்கும் பொழுது பானை வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு குடும்ப வறுமை காரணமாக கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது. அப்போது அவருடைய நிலத்தில் ஒரு அதிசயம் நடக்கிறது. அதை பார்க்கும் மக்கள் அப்படியே நம்புகின்றனர். மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாக பயன்படுத்த சந்தானம் முயற்சி செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோவிலை வைத்து அவர் நன்றாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த ஊருக்கு வரும் தாசில்தார் கோவிலின் கணக்கு வழக்கு பார்க்க முயற்சிக்கிறார். கோவிலின் சொத்துக்களை திருட தாசில்தார் முயற்சி செய்கிறார். அப்போது கோவிலின் சொத்துக்களை தானே ஆட்டையை போட ஹீரோ முயற்சிக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? தாசில்தாருக்கும் சந்தானத்திற்கும் இடையே நடந்த கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாதியில் சில காமெடிகளை வைத்து ஒப்பேத்தி இருக்கின்றனர். சாமி கண்ணை குத்திடும் என்பதற்காக மெட்ராஸ் ஐயை சந்தானம் பரப்புவது அரை மணி நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது இந்த படத்தில் தொய்வாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் பாகத்தில் காமெடிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. நிழல்கள் ரவி காமெடி எல்லாம் மிக அருமையாக வைத்திருந்தது. சேசு செய்த நடனம் மிகப் பிரமாதமாக வந்திருந்தது. சுமாராக ஸ்டார்ட் பண்ணி இந்த படம் சூப்பராக முடிந்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் நன்றாக பயன்படுத்தப்பட்டிருந்தார். ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் போலவே இந்த படத்திலும் அனைவருக்கும் ஸ்பேஸ் கொடுத்திருந்தார். சந்தானம் மூளையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வந்தால் இந்த படம் நல்ல படமாக இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies