Categories: சினிமா

சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வடிவேல் பாலாஜி குடும்பம்..! கதறி அழும் மனைவி..கண்கலங்க வைக்கும் குடும்பநிலை

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒரு பிரபல காமெடியனாக இருந்தவர் வடிவேல் பாலாஜி. வாய்ப்புக்காக மிகவும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இறுதியில் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, அது இது எது சிரிச்சா போச்சு சுற்றுகளில் காமெடி வேடங்களும் பெண் வேடங்களும் ஏற்று நடித்தவர். சிரிச்சா போச்சு சுற்றில் இவரின் முகத்தை பார்த்தவுடனேயே போட்டியாளர்கள் சிரித்து விடுவர். பாடி லாங்குவேஜிலேயே சிரிக்க வைத்துவிடுவார். மக்களை மகிழ்வித்த அந்த கலைஞன் 2020ம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். விஜய் டிவியை திருப்பினாலே வந்து கொண்டிருந்த அந்த முகம் ஒரு நாள் மறைந்து போனது. இது வடிவேல் பாலாஜியை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த விஜய் டிவி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வடிவேல் பாலாஜி குடும்பம்..! கதறி அழும் மனைவி..கண்கலங்க வைக்கும் குடும்பநிலை 1

வாதம் ஏற்பட்டத்தால் கை கால்கள் உடல் என ஒவ்வொரு பாகமாக செயலிழந்து வந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அதனாலேயே நல்ல மருத்துவமனையை விட்டுவிட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும், விஜய் டிவி பிரபலங்கள் பலர் உதவவில்லை என்றும் அப்போதே நெட்டிசன்களால் விமர்சித்து வந்தனர். ஆனால் பலர் உதவி செய்தும் வடிவேல் பாலாஜியை காப்பாற்ற முடியவில்லை. மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் மரணமடைந்தார். கொரோனா சமயம் என்பதால் டிவி நிகழ்ச்சி, மேடை நிகழ்ச்சி என்ற இதெல்லாம் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார் வடிவேல் பாலாஜி.

தன்னால் பிறர் சிரிக்க மட்டுமே வேண்டும் என்றும், யாரும் தன்னை நினைத்து அழக்கூடாது என்று எண்ணியவர் வடிவேல் பாலாஜி. பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது என்றுதான் உடல்நிலை சரியில்லாத போதும் கூட யாரிடமும் உதவி கூட கேட்கவில்லை. சமீபத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அமுதவாணன் வடிவேல் பாலாஜி போன்று வேடமணிந்து வந்தார். அதை பார்த்த பலரும் கண்ணீர் வடித்தனர். ஒரு தனியார் யூடியூப் சேனல் வடிவேல் பாலாஜியின் மனைவியிடம் பேட்டி எடுக்க சென்றுள்ளனர். அப்போது பேசிய அவர் தான் நலமாக இருப்பதாகவும், உதவி தேவையில்லை என்றும் கூறினார். ஆனால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது வடிவேல் பாலாஜியின் மனைவி சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாக தெரிவித்தனர். டிவியில் வடிவேல் பாலாஜி வேடம் போட்டவரை பார்த்து கதறி அழுத பிரபலங்கள், நிஜத்தில் கஷ்டப்படும் வடிவேல் பாலாஜியின் மனைவிக்கு உதவுவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

YouTube Video Code Embed Credits: Newsglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்