Categories: சினிமா

ட்ரெண்டிங்கில் இணைந்த வைகை புயல்.! பாடலுக்கு மரண குத்தாட்டம்.! தலைவன் செம்ம ஹாப்பியா இருக்காரு போல.!

வெளியிட்டது

நாளை நாய் சேகர் படம் வெளியாக இருக்கும் நிலையில் வடிவேலு கச்சா பாதம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.அதை தற்போது லைகா ப்ரொடக்ஷன் நிறுவனமே வெளியிட்டு இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். ஒருவரை சிரிக்க வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதிலும் குறிப்பாக தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுக்கு நிகர் யாருமே இல்லை. இவர் சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்தபோது அனைத்து மீம்ஸ்களிலும் இவர்தான் நிரம்பி வழிந்தார். இவர் நடிப்பிற்கு இடைவேளை எடுத்து இருந்தபோது, பல நடிகர்கள் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் வந்திருந்தாலும் வடிவேல் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

ட்ரெண்டிங்கில் இணைந்த வைகை புயல்.! பாடலுக்கு மரண குத்தாட்டம்.! தலைவன் செம்ம ஹாப்பியா இருக்காரு போல.! 1

ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரண்டு ஜாம்பவான்களுடன் இணைந்து மூன்றாவதாக காமெடி செய்து வந்தார் வடிவேலு. பின்னர் அவர் தனி ஒரு நகைச்சுவை நடிகராக உருமாறி படங்களில் நடித்த தொடங்கினார். அன்று தொடங்கி இன்று வரை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் வடிவேலு. இவர் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் தான் நாய் சேகர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை திருடி இவர் பிஸ்னஸ் செய்வது போன்று கதை இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து ட்ரைலர் டீசர் என அனைத்தும் வெளியாகி வைரலாகி இருந்தது. மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருந்தது.

இந்த மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு படத்தில்இருந்து சில ப்ரோமோக்களை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வடிவேலு கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சில காலமாக இன்ஸ்டாகிராமில் வைரலாக இருந்த ஒரு பாட்டு என்று சொன்னால் அது கச்சா பாதம் தான். அந்த பாடலுக்கு தற்போது வடிவேலு சூப்பராக நடனம் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.!

Youtube Video Code Embed Credits: Lyca Productions

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்