மீண்டும் களத்தில் இறங்கி கலக்க வரும் வைகை புயல்! வெளிவந்த வடிவேலுவின் அதிரடியான ஆடியோ

வெளியிட்டது

Watch the video below நகைச்சுவை நடிகராக திரைத் துறையில் அறிமுகமாகி சில படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தியவர் வைகைப் புயல் வடிவேலு. தன் சிறப்பான நகைச்சுவை ஆற்றலால் ரசிகர்கள பலரைச் சம்பாதித்தவர். இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். அவர் மீண்டும் முன்பு போல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இயக்குனர் சிம்பு தேவன் 2006இல் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ நகைச்சுவைப் படத்தை இயக்கினார்.

மீண்டும் களத்தில் இறங்கி கலக்க வரும் வைகை புயல்! வெளிவந்த வடிவேலுவின் அதிரடியான ஆடியோ 1

வடிவேலு முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிய இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் வடிவேலு நடிப்பில் இயக்க சிம்பு தேவன் முன் வந்தார். ஷங்கர் தான் தயாரிப்பாளர். 2017இல் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதற்கிடையே வடிவேலு மற்றும் படக்குழுவினருக்கு விவாதம் பல ஏற்பட்டது. ஆதலால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இனி படத்தில் தாம் நடிக்கப் போவதில்லை என வடிவேலு கூறியுள்ளார். Watch the video below

ஆதலால் தயாரிப்பாளர் ஷங்கர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தனக்கு 7 கோடி நஷ்டம் அடைந்ததாக புகார் அளித்திருந்ததால் வடிவேலுவிற்கு ரெட் கார்டு வழங்கியது. இந்நிலையில் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி பிரச்சினை சுமுகமாக சங்கத்தினரால் நேற்று முடித்து வைக்கபட்டது. இதனால் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு வருகிற நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலுவை மீண்டும் திரையில் ரசிகர்கள் கண்டு மகிழலாம். Watch the video below Video embeded credits to Cinema Vikatan youtube channel

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்