Categories: சினிமா

நான் பாடுறது என் கணவருக்கு பிடிக்காது.! விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய வைக்கம் விஜயலக்ஷ்மி

வெளியிட்டது

பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலெட்சுமி தன் கணவரை பிரிந்தது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் முதன்முறையாக பேசியிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியான இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான செல்லுலாய்டு என்கின்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் குக்கூ என்கிற படத்தில் ஒரு பாடலை பாடி தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வீரசிவாஜி என்கிற படத்தில் வெளியான சொப்பன சுந்தரி நான்தானே, ஜெய்பீம் படத்தில் மண்ணிலே இடம் உண்டு படம் இவர் குரலில் வெளியான அருமையான பாடல்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் இவர் பல சாமி பாடல்கள் மற்றும் பல ஆல்பங்களை பாடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் பாடுறது என் கணவருக்கு பிடிக்காது.! விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய வைக்கம் விஜயலக்ஷ்மி 1
இந்த நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப் என்கிற மிமிக்ரி கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்து. 2021 ஆம் ஆண்டு இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்து குறித்து இதுவரை எந்த தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளிக்காத அவர் தற்போது ஒரு தனியார் youtube தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன் கணவர் ஒரு சாடிஸ்ட் போன்றவர் அவர் ஒரு சர்வாதிகாரி. என் அம்மாவிடம் கூட என்னை பேச விடமாட்டார், நான் தாளம் தட்டினால் கூட அவருக்கு பிடிக்காது. என் திருமண வாழ்க்கை முழுவதும் கண்ணீர்கள் மட்டுமே நிறைந்ததாக இருந்தது, நான் கண்ணீர் விடாத நாளை இல்லை என்று பேசினார்.

நான் என்ன செய்தாலும் நெகட்டிவ் மட்டுமே சொல்லுவார் என் கணவர். நம் பல்லில் ஒரு அழுகிய சொத்தைப்பல் இருந்தால் அதை பிடுங்கி எறிவது தானே வழக்கம்? அதுபோல வாழ்க்கையிலும் அப்படித்தான். நமக்கு துன்பம் தரும் யாராவது இருந்தால் அவரை தூக்கி எறிந்து விட வேண்டியது தான். எனக்கு எல்லாமே சங்கீதம் தான் சங்கீதத்தை விட்டும் என் அம்மாவை விட்டும் என்னை பிரிக்க பார்த்தவரை நான் தூக்கி எறிந்து விட்டேன் என்று வைக்கம் விஜயலட்சுமி பேசினார். அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த பேட்டியை காண..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Cineulagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்