ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.தற்போது இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியலை சூழ்நிலைகள் பற்றி தமிழ் ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது பல்வேறு அரசியல் சூழ்நிலை என்ற நிலை என்றாலும் தமிழ் மீது பற்றுள்ள பிரபலங்கள் தமிழுக்கு இழைத்த துரோகத்தில் தான் இது அவர்களுக்கு நடந்துள்ளது என கூறி வருகிறார்கள்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற குரல் இலங்கை தீவு முழுக்க எதிரொலிக்கிறது.
இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டதால் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி திரிகோண மலையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதே மே மாதம் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதன் பலனைத்தான் ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார் என்ற பேச்சு, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.