Categories: சினிமா

ஜூலை மாதத்தில் வெளியாகும் வலிமை First Look? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

வெளியிட்டது

அஜித் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர். அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் அஜித் “தல” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அஜித்தின் கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படம் 2019ல் வெளியானது. அடுத்தது வலிமை எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். வலிமை படத்தை வினோத் இயக்குகிறார் போனி கபூர் தயாரிக்கிறார் யுவன் ஷன்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜூலை மாதத்தில் வெளியாகும் வலிமை First Look? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் 1

வெகுநாளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இனிய செய்தி கிடைத்துள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று அவர் நடிக்கும் படமான பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, தல ரசிகர்கள் தங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் வராதா என வருத்தமடைந்தனர். இந்நிலையில் தற்போது ஜூலை மாதம் முதல் வாரத்தில் அப்டேட் வரபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் முடிவடைந்தது.

கடந்த வருடமே முடிய வேண்டிய படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமாகியுள்ளது என்று கூறப்பட்டது. இன்னும் 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு தற்போது எடுக்கவுள்ளதாக இருக்கின்ற்றனர். படப்பிடிப்பு இந்த மாதத்தில் முடிவடைந்து அடுத்த மாதமான ஜூலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும், பின்பு டீஸர் என வேகமாக அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . அக்டோபர் மாத இறுதிக்குள் படம் திரைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்