அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது வலிமை திரைப்படம். அஜித் குமார் என்றாலே தல தல என்று உயிரை விடும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள்
பட்டாளத்தையே வைத்துள்ளார் நடிகர் அஜித். தற்போது இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர உள்ளது வலிமை திரைப்படம். பிப்ரவரி 24ம் தேதி ஙெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான உடனேய திரையிரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. அந்த அளவிற்கு அனைவரது ஆவலையும் தூண்டி உள்ளது வலிமை. H. வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.
இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்கொண்டே இருந்த நிலையில் பிப்ரவரி 24 படம் வெளியாகும் என்ற அறிவிப்பினால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் Pre Release show காட்டப்பட்டது. இதில் ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திவிட்டனர் அஜித் ரசிகர்கள். மேலும் அவர்கள் கூறுகையில் அஜித் நடிக்கவே வேண்டாம் இரண்டு நிமிடம் அவரது முகத்தை காட்டினாலே போதும் என்றும், பாகுபலி என்னா பாகுபலி வலிமை 2500 கோடி வசூலைத் தாண்டும் என்றும் அவர்கள் கூறினர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..