Categories: சமூகம்

வள்ளுவருக்கு குல்லாவோ சிலுவையோ அணிவித்தாலும் பிரச்சனை இல்லை: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பேச்சு!!

வெளியிட்டது
வள்ளுவருக்கு குல்லாவோ சிலுவையோ அணிவித்தாலும் பிரச்சனை இல்லை: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பேச்சு!! 1

திருவள்ளுவர் இந்து மதம் என்று கூறுவது அவரவர்களின் விருப்பம் எனவும் , வள்ளுவருக்கு சிலுவையும், குல்லாவும் அணிவித்தால் கூட எனக்கு பிரச்சினை இல்லை எனவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா. ஃபா. க. பாண்டியராஜன் பேசியுள்ளார்.

தமிழகத்தின் பாஜக அமைப்பு தன் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டிருந்தது. அந்த படத்தில் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் காவி உடை அணிந்து ருத்ராட்சம் அணிந்துள்ளது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அனைவரிடத்திலும் இருந்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா. ஃபா. க.பாண்டியராஜன் கூறியதாவது, “திருவள்ளுவரை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் எனவும் திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு அரசாணையும் இல்லை . திருவள்ளுவருக்கு உலகளாவிய யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான நேரம் தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் திருவள்ளுவருக்கு சிலுவையோ, குல்லாவோ போட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்