வலிமை அப்டேட் தான் குடுத்துட்டாங்களே! வலிமை அப்டேட் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீநிவாசன்.

வெளியிட்டது

Watch the video below தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது.

வலிமை அப்டேட் தான் குடுத்துட்டாங்களே! வலிமை அப்டேட் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீநிவாசன். 1

அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது வலிமை படத்தின் அப்டேட் காக தான். இதை தொடர்ந்து வலிமை பற்றி ஒரு தகவல் கூட வரவில்லை என ரசிகர்கள் 2020தில் இருந்தே பொங்கி எழ ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தல ரசிகர்கள் எங்கு யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என்று கேட்க தொடங்கினர்.

தேர்தல் பிரச்சாரங்களில், கிரிகெட் மைதானத்தில், பிரமரின் தமிழக வருகையின் போது என யாரையும் விட்டு வைக்கவில்லை. அதேசமயம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வலிமை அப்டேட் ஹஷ்டாக்குகளை ட்ரெண்டிங் செய்தனர். ஒரு முறை தல ரசிகர் ஒருவர் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி ஶ்ரீநிவாசன் அவர்களது ட்விட்டர் கணக்கில் வலிமை அப்டேட் என கேட்டார்.

அதற்கு அவர் “நான் தேர்தலில் வெற்றி பெற்றதும் வரும் தம்பி” என பதில் பதிவிட்டார். பின்பு தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு ஒரு பேட்டியில் நீங்கள் தருவதாக கூறிய அப்டேட் எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு வானதி ஶ்ரீநிவாசன் அளித்த பதில் அந்த ட்விட்டர் பதிவுக்கு அடுத்த நாளே வலிமை அப்டேட் கிடைத்துவிட்டதே என்று கூறியுள்ளார்.Watch the video below

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்