ரட்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா சில காட்டமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் முன்னாள் காதலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தன்னுடைய ஆதரவில் தான் ராபர்ட் பிக்பாஸ் உள்ளே சென்று இருக்கிறார் என்று வனிதாவே ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார். உள்ளே சென்றபின் வனிதாவால்தான் இந்த இடத்திற்கு வந்தேன் என்று மேடையில் கூறுவேன் என்று வனிதாவிடம் கூறியிருக்கிறார் ராபர்ட். இதை நம்பி வனிதாவும் அவரை ரெகமெண்ட் செய்து உள்ளே அனுப்பி இருந்தார். ஆனால் உள்ளே சென்ற பின்னர் வனிதா பற்றி ராபர்ட் மாஸ்டர் வாயவே திறக்கவில்லை. இது குறித்து பேசிய வனிதா, தனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தற்போது தினமும் பிக்பாஸ் இல் நடக்கும் விஷயங்கள் பற்றி ரிவ்யூ கொடுத்து வருகிறார் வனிதா. இதில் நேற்று பிக்பாஸ் வீடு அரசவைப் போல் மாறி இருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரட்சிதா ராணியாகவும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவகர்களாகவும் மாறியிருந்தனர். இதில் ரட்சிதாவுக்கு வில்வித்தை சொல்லிக் கொடுக்கிறேன் என்று பாகுபலி படத்தில் வருவது போல ரட்சிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு ராபர்ட் மாஸ்டர் நின்றார். அந்த காட்சிகளை எல்லாம் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து விட்டனர். தொடர்ந்து ரட்சிதாவிடம் எல்லை மீறி கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டரை பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் வனிதா, தற்போது ஒரு பேட்டியில் ரட்சிதா செய்வது எச்சத்தனமாக இருக்கிறது என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
ஒரு ரியாலிட்டி ஷோவில் அமர்ந்து கொண்டு இது போல் கன்றாவியான காட்சிகளை பார்க்க முடியவில்லை, லைவிலிருந்து சில காட்சிகளை கட் பண்ணி தமக்கு சிலர் அனுப்பியதாகவும், அதில் ராபர்ட் மாஸ்டர் ஜூஸ் கொண்டு வந்து ரட்சிதாவிற்கு கொடுக்கிறார் அதை வாங்கி ரட்சிதாவும் குடிக்கிறார். பின்பு மீண்டும் அதை வாங்கிய ராபர்ட் மாஸ்டர் நீ எந்த பக்கம் வாய் வைத்து குடித்தாய் என்று கேட்கிறார். இதையெல்லாம் பார்த்தால் எச்சத்தனமாக இருக்கிறது. ரட்சிதா ராபர்ட்டை தூண்டிவிடுகிறார், ஆனால் பின்னால் போய் திட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும் அளவிற்கு நம்முடைய நிலைமை கேவலமாக போய்விட்டது என்று வனிதா காட்டமாக பேசியிருக்கிறார்.
Youtube Video Code Code Embed Credits: Indiaglitz Tamil