தயாரிப்பாளர் ரவீந்திரின் திருமணம் குறித்து நடிகை வனிதா சில தகவல்களை கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் இந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து இருக்கிறார். இவரை தயாரிப்பாளராக தெரிந்ததை விட பிக்பாஸ் விமர்சேகராகவே பலருக்கும் தெரியும். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட வனிதாவை ரவீந்திரன் கடுமையாக விமர்சித்தார். அது மட்டுமல்லாமல் வனிதா வெளியே வந்த பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், வனிதா செய்வது தவறு என்று வார்த்தை போர்களில் ஈடுபட்டு வந்தார் ரவீந்தர். மேலும் பீட்டர் பாலில் மனைவிக்கு ஆதரவாகவும் இருந்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வனிதா மற்றும் ரவீந்தர் இருவருக்கும் வார்த்தைப் போர் நாளுக்கு நாள் நீடித்து வந்தது. இருவரும் இணையத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர். பின்னர் சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த பின்னர், ரவீந்திரன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே வனிதாவின் திருமணத்தை விமர்சித்த ரவீந்திரன், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் வனிதா என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது. இதற்கிடையே வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கெல்லாம் கர்மா தான் காரணம், கர்மாவிற்கு எப்போது எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும் என்று காட்டமான ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த பலரும் இது ரவீந்தரை குறித்து தான் வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வந்தனர். தற்போது ஒரு பேட்டியின்போது வனிதாவிடம் இந்த ட்வீட் குறித்து கேட்கப்பட்டது. அப்போது ரவீந்தர் குறித்து அவர் பல கருத்துக்களை முன் வைத்தார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Little Talks