பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து அதிரடியாக விலகி உள்ளார் வனிதா. வெளியேறிய பின் முதல் முறையாக தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3ன் அதிரடி போட்டியாளர் வனிதா. சர்ச்சை, சண்டை என அதிரடி காட்டியதால் பிக்பாஸ் வீட்டிற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று இவரை தேர்ந்தெடுத்தது பிக்பாஸ் டீம். இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி சீசன் 1ல் பங்கேற்று வெற்றியாளாராக வாகை சூடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மாஸ் காட்டி வந்தார் வனிதா.

தற்போது கமல் அல்டிமேட்டிலிருந்து விலகியுள்ளார். சிம்பு மீதி நாட்களை தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் வனிதா நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை செய்தார். சீசன் 5ல் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட இருந்த போது ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதே போல தற்போது கமல் விலகியுள்ள நிலையில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் வனிதா விலகி ஓடிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா நான் ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாக சிலர் கிளப்பி விடுகின்றனர்.
தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நாலு நாள் தான் கமலஹாசன் ஷூட்டிங்க்கு வர போகிறார் அவர் சொந்த படத்தில்தான் அவர் நடிக்க போகிறார். அதற்க்கு ஏன் பிக்பாஸை விட்டு வெளியேற வேண்டும் என கமலை கேட்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி தவறான பாதையில் போகிறது என்றும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் அவர் கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..