பிக் பாஸ் 7ன் போட்டியாளராக விளையாடி வரும் ஜோவிகாவுக்கு அவரது தாயார் வனிதா தற்போது மறைமுக செய்தி ஒன்றை தெரிவித்திருக்கிறார். ஜோவிகாவிற்கு வனிதா அனுப்பிய உடையில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு அனுப்பி வைத்திருப்பதால், இனியாவது ஜோவிகா மாயா, பூர்ணிமா ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி தனித்து விளையாட வேண்டும் என்கிற மறைமுக செய்தியை கொடுத்திருப்பதாகவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 3 வெற்றிக்கு காரணமாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். அவர் அந்த சீசனில் வெற்றி பெறாவிட்டாலும் எப்பொழுதும் வீட்டை பரபரப்புடன் வைத்திருந்தார். அவர் தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக அனுப்பி வைத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பம் முதலே நல்ல விளையாட்டை வெளிப்படுத்தி வந்த ஜோவிகா, ஒரு கட்டத்தில் கூட்டணியாக இணைந்து செயல்படத் தொடங்கினார். இது இணையத்தில் பெரும் விமர்சனத்தை கிளப்பியது. குறிப்பாக மாயா பூர்ணிமா உடன் இணைந்து புல்லி கேங்கில் ஒருவராக அவர் செயல்படத் தொடங்கினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் வெளியில் வனிதா தனது மகளின் நிலை குறித்து இணையத்தில் விளக்கம் அளித்து வந்தார். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் ஜோவிகாவுக்காக சில உடைகளை அனுப்பி இருந்தார் வனிதா. அதில், “சிங்கம் ஆல்வேஸ் சிங்கிள்” என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தது.
இதை கவனித்த விசித்ரா, “சிங்கம் எப்போதும் சிங்கிளா?” எனக்கேட்க, “வேறு வழி?” என்று ஜோவிகா பதிலளித்தார். ஜோவிகா அப்படி கூறும்பொழுது அதை பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா, அங்கிருந்து விலகிச் செல்கிறார். இதனால் மாயா பூர்ணிமா கேங்கில் இருந்து விலகுமாறு தனது தாயார் சூசகமாக தெரிவித்துள்ளதை ஜோவிகா புரிந்து கொண்டு இருப்பதாகவே தெரிகிறது. இதை நெட்டிசன்களும் வரவேற்று வருகின்றனர். 19 வயதே ஆன ஜோவிகா ஆரம்பம் முதலே திறமையாகவும் தெளிவான பேச்சையும் வெளிப்படுத்தி வந்த நிலையில், கூட்டமாக இணைந்து இரண்டு வாரங்களாக விளையாடியது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஜோவும் வனிதாவின் இந்த சூசக மெசேஜை புரிந்து கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.