1990களில் நாயகியாக சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகை வனிதா விஜயகுமார். பின்னர் திடீரென தனது தந்தையும் நடிகருமான விஜய்குமாருடன் சொத்து தகராறில் ஈடுபட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

அவரை விஜய் டிவி கொண்டு போய் தங்களுடைய சொந்த நோக்கத்திற்காக “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கியது. அதிலும் அனைவருடனும் முறைத்துக்கொண்டு சண்டகோழியாக திரிந்தார். பலரும் அவரை திட்டி தீர்த்தாலும், கொஞ்ச கூட தன்னுடைய பாணியை மாற்றி கொள்ளாமல், அவரே இருந்து வருகிறார்.
பீட்டர் என்பவரை அண்டாவில் 3வது திருமணம் முடித்த இவர், சில நாட்களிலேயே அந்த திருமணத்தை முறித்து கொண்டு இப்பொது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது நமது நடிகை வனிதா ஒரு காலத்தில் சர்ச்சை நாயகியாக இருந்தாலும் இப்போது எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் தன் வாழ்க்கையை தனது மகளுடன் சேர்ந்து நல்ல முறையில் வந்து வருகிறார்.
ஆனால் இப்போது நமது நடிகை வனிதா பல துன்பத்தில் இருந்தாலும் தனக்கு சொந்தமாக பல தொழில் செய்து வருகிறார். ஒரு துணிக்கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இந்த துணிக்கடை கூட சமீபத்தில் தான் ஆரம்பித்தார் இந்த துணிக்கடையில் அனைத்து விதமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தேவையாக துணிகள் அனைத்தும் இருப்பதாக கூறியிருந்தார்.
இவருடைய நடிப்பில் உருவாகி வரும் “வாசுவின் கர்ப்பிணிகள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீயா நானா புகழ் கோபிநாத், விஸ்வாசம் புகழ் அனிகா சுரேந்திரன் நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த “சேவியர் பிரிட்டோ” தயாரித்து வருகிறார். இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படத்திற்கான வெளியிட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்கும் நிலையில், தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் மாரி தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார். அந்த தொடர் இப்பொது தான் ஒளிபரப்பாக துவங்கியுள்ளது. அதற்குள்ளாகவே அந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி அவர் அனைவரியும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அந்த ப்ரோமோ நீங்களும் காண…..
Video Courtesy – Zeetamil.