இந்த வாரம் ஜோவிகா தான் எலிமினேஷனா.? வனிதா போட்ட பதிவு.! கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது 8 வாரங்கள் முடிந்து ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. இன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்பு நடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. ஆரம்பம் முதலே சண்டை சச்சரவுடன் தொடங்கி நடந்து வரும் இந்த சீசன், நாட்கள் செல்ல செல்ல விறுவிறுப்பு குறைய ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் பலரும் சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் காரணம்தான். குறிப்பாக ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்ப்பை கொடுத்த வனிதாவின் மகள் ஜோவிகா நாட்கள் செல்ல செல்ல சுவாரஸ்யம் குறைவான போட்டியாளராக மாறினார்.

இந்த வாரம் ஜோவிகா தான் எலிமினேஷனா.? வனிதா போட்ட பதிவு.! கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.! 1

முதல் வாரத்திலேயே தன்னுடைய படிப்பை பற்றி பேசிய விசித்ராவிடம் சண்டை போட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார் ஜோவிகா. பின்னர் தொடர்ந்து வீட்டில் ஆக்டிவாக இருந்து வந்த அவர், டாஸ்க்களில் சிறப்பாக பங்கெடுப்பது, உணவுக்கு வரும் பொருட்களை சரியாக அளந்து சமையல் டீமிடம் கொடுப்பது போன்ற பல நல்ல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.ஆனால் அர்ச்சனா வருகைக்குப் பின்னர் அவர் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து கொண்டு அர்ச்சனாவை படாதபாடு படுத்தி இருந்தார். தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. மாயா, பூர்ணிமா போன்றோர் தங்களது விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கேங்கில் இருந்து பிரிந்த பின்னர் ஜோவிகாவை காணவில்லை என்ற சொல்லும் அளவிற்கு அவர் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக மாறிப்போனார்.

குறிப்பாக அவர் தூங்கிக் கொண்டே இருக்கிறார். அவரின் தூங்கும் வீடியோவை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். வெளியில் வனிதா விஜயகுமார் தனது மகளுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், அவர் தற்போது பதிவிட்டு இருக்கும் ஒரு பதிவு ஜோவிகா இந்த வாரம் வெளியேறப் போகிறாரா? என்கிற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் தோல்வியுற்றால் முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். ஏனென்றால் கற்றலுக்கு தோல்வி என்பது முதல் படி. அதே போல் முடிவு என்பது உண்மையான முடிவு அல்ல, முடிவு என்பது “தோல்வி எப்பொழுதும் சாகாது” என்று பொருள். நீங்கள் ‘நோ’ என்கிற பதிலைப் பெற்றால் ‘நோ’ என்பது ‘அடுத்த வாய்ப்பு’ என்பதை மனதில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.


வனிதாவின் இந்த பதிவு ஒருவேளை ஜோவிகா எலிமினேட் ஆகுவதை தான் இப்படி கூறுகிறாரோ என்று ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் ஜோவிகா கடைசி இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்