ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து தான் வெளிய வந்தேனா? உண்மை காரணத்தை சொன்ன வனிதா

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 3ன் அதிரடி போட்டியாளர் வனிதா. சர்ச்சை, சண்டை என அதிரடி காட்டியதால் பிக்பாஸ் வீட்டிற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று இவரை தேர்ந்தெடுத்தது பிக்பாஸ் டீம். இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி சீசன் 1ல் பங்கேற்று வெற்றியாளாராக வாகை சூடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மாஸ் காட்டி வந்தார் வனிதா.

ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து தான் வெளிய வந்தேனா? உண்மை காரணத்தை சொன்ன வனிதா 1

தற்போது கமல் அல்டிமேட்டிலிருந்து விலகியுள்ளார். சிம்பு மீதி நாட்களை தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் வனிதா நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை செய்தார். சீசன் 5ல் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட இருந்த போது ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதே போல தற்போது கமல் விலகியுள்ள நிலையில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் வனிதா விலகி ஓடிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா நான் ரம்யா கிருஷ்ணனுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாக சிலர் கிளப்பி விடுகின்றனர்.

நான் எப்போதும் என்னை நானே மதிக்கிறேன், மேலும் துணிச்சலான முடிவை மட்டுமே எடுப்பேன், அப்படித்தான் வீட்டை விட்டு வெளியேறும் முடிவையும் எடுத்துள்ளேன், என்னுடைய நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்த பிக்பாஸ் டீம் மற்றும் டிஸ்னிக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சல்லித்தனமான விஷயங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், நான் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் சிறு குழந்தைகள் வேண்டுமானால் இந்த நாடகங்களை ரசிக்கட்டும் என்று அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கோபமாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்