இது ஒரு தோல்வியடைந்த சீசன்.! பிக்பாஸை தடை செய்க.! வனிதா அதிர்ச்சி பதிவு.!

வெளியிட்டது

“பிக் பாஸ் சீசன் 7 மிகவும் போர் அடிக்கிறது தோல்வியடைந்த இந்த சீசனை ரத்து செய்யவும், தகுதியற்ற இந்த பிக் பாஸ் சீசன் 7 தடை செய்யவும்” வனிதா விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். சின்னத்திரை உலகின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. பிக் பாஸில் 6 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது வரை 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ஐந்து பேர் நாமினேஷனில் சிக்கி இருந்த நிலையில் புயலால் எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது ஒரு தோல்வியடைந்த சீசன்.! பிக்பாஸை தடை செய்க.! வனிதா அதிர்ச்சி பதிவு.! 1
நிலைமை ஒரு புறம் இப்படி இருக்க வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7ல் தனது மகளை போட்டியாளராக அனுப்பி வைத்திருந்தார். கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா வெளியேற்றப்பட்டது தொடங்கி பிக் பாஸை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இருவருக்கிடையே சண்டை வெடித்திருந்தது. நிக்சன் அர்ச்சனாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். வாடி போடி என்று ஒருமையிலும், உன்னை சொருகி விடுவேன் என்றும் நிக்சன் பேசியிருந்தது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து தொடர்ந்து தனியார் youtube சேனலில் விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “இன்று 24 மணி நேரம் பார்த்து ஒரு புண்ணியமும் இல்லை, தோல்வி அடைந்த இந்த சீசனை ரத்து செய்யுங்கள், மேலும் போரிங் ஆக விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் எலிமினேட் செய்யுங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய நற்பெயரை இழந்து விட்டது, மேலும் தகுதியற்ற மற்றும் கேவலமான மனநிலை கொண்ட மனிதர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும், எனவே பிக் பாஸ் சீசன் 7ஐ தடை செய்து விடுங்கள், உண்மையாலுமே இந்த நிகழ்ச்சி தகுதியற்றது” என்று சொல்லி காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.


அவரின் அந்தப் பதிவுக்கு கீழே பலரும் உங்கள் மகளை வெளியேற்றி விட்டதால் இந்த சீசன் போராகி விட்டதா? உங்கள் மகள் விளையாடி வந்தவரை இது மிகவும் நல்ல ஷோவாக இருந்தது, இப்போது அந்த மாறி விட்டதா என்று சொல்லி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Twitter Original Source From: Vanitha Vijaykumar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்