Sachana வெளியே போனது நல்லது..! Vanitha பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தந்தை விஜயகுமாரால் வாய்ப்பு கிடைத்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சண்டையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் வனிதா. இதனால் இவரை அனைவரும் வத்திக்குச்சி வனிதா என அழைத்து வந்தார்.

Sachana வெளியே போனது நல்லது..! Vanitha பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி..! 1

தற்போது இவர் பிக் பாஸ் போட்டியை விமர்சனம் செய்து வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி தற்போது பிக் பாஸ் 8வது சீசன் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

இதில் முதல் ஆளாக சாச்சனா வெளியேற்றபட்டு இருந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்நிலையில், சாச்சனா வெளியே போனது நல்லது என வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,சாச்சனாவுக்கு மகாராஜா ஹிட்டுக்கு பிறகு வாய்ப்பு இருக்கும், அதனால் அவருக்கு பிக் பாஸ் வீடு தேவைப்படாது, அவர் உள்ளே இருந்தாலும் விளையாடவிடமாட்டார்கள் என்பதை போல பேசியுள்ளார். இவரின் பேச்சுக்கு ரசிகர்கள், அப்போ எதுக்கு உங்க பொண்ணை மட்டும் அனுப்புனீங்க என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்