தயாரிப்பாளர் ரவீந்திரின் திருமணம் குறித்து நடிகை வனிதா சில தகவல்களை கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் இந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து இருக்கிறார். இவரை தயாரிப்பாளராக தெரிந்ததை விட பிக்பாஸ் விமர்சேகராகவே பலருக்கும் தெரியும். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட வனிதாவை ரவீந்திரன் கடுமையாக விமர்சித்தார். அது மட்டுமல்லாமல் வனிதா வெளியே வந்த பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், வனிதா செய்வது தவறு என்று வார்த்தை போர்களில் ஈடுபட்டு வந்தார் ரவீந்தர். மேலும் பீட்டர் பாலில் மனைவிக்கு ஆதரவாகவும் இருந்து வந்தார்.

இதனால் வனிதா மற்றும் ரவீந்தர் இருவருக்கும் வார்த்தைப் போர் நாளுக்கு நாள் நீடித்து வந்தது. இருவரும் இணையத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர். பின்னர் சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த பின்னர், ரவீந்திரன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே வனிதாவின் திருமணத்தை விமர்சித்த ரவீந்திரன், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் வனிதா என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது. இதற்கிடையே வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கெல்லாம் கர்மா தான் காரணம், கர்மாவிற்கு எப்போது எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும் என்று காட்டமான ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த பலரும் இது ரவீந்தரை குறித்து தான் வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வந்தனர். தற்போது ஒரு பேட்டியின்போது வனிதாவிடம் இந்த ட்வீட் குறித்து கேட்கப்பட்டது. அப்போது ரவீந்தர் குறித்து அவர் பல கருத்துக்களை முன் வைத்தார். வனிதா கூறும் பொழுது எப்பொழுதுமே அடுத்தவர் விஷயங்களில் தலையிடக்கூடாது. ஆனால் பப்ளிசிட்டிக்காக பலர் அடுத்தவர்கள் குடும்ப வாழ்க்கையில் தலையிட்டு வருகின்றனர். அதை குறிப்பிட்டு தான் தான் ஒரு ட்வீட் போட்டேன் ஆனால் அது ரவீந்தரை மட்டுமே குறித்தது அல்ல. தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை யோசித்து கர்மா குறித்து பதிவிட்டதாக கூறினார். மேலும் தனக்கு பௌத்த மதத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் நான் கர்மாவை மிக நம்புவதாக கூறினார். பிறகு ரவீந்திரன் மகாலட்சுமி பற்றி பல கருத்துக்களை கூறினார்.
அப்போது அவர் நான் ரவீந்திரன் மகாலட்சுமி திருமணத்தை மனதார வாழ்த்துகிறேன். அவர்கள் இருவரும் நன்றாக இருக்கட்டும். அவர்கள் திருமணம் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் நான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட போது ரவீந்திரன் என்னவென்ன வெல்லாம் பேசினார்? பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாக என்னென்ன கருத்து எல்லாம் சொன்னார் என்று எனக்கு தெரியும். மேலும் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என்று வனிதா கூறினார். தனக்கும் ரவீந்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது, என்னை அழைத்து ரவீந்தர் ஒரு பேட்டி ஒன்றை எடுத்தார். என்னை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் தனக்கு காசு கொடுத்தால் தான் வருவேன், காசு இல்லாமல் தன்னால் பேட்டி கொடுக்க முடியாது என்று வனிதா கூறியதாகவும், அதனால் பணம் கொடுத்து வனிதாவை அழைத்து வந்து ரவீந்தர் ஒரு பேட்டியை எடுத்ததாகவும் வனிதா கூறினார்.
ஆனால் பேட்டியின் ப்ரோமோவை வெளியிட்டபோது கமெண்டில் பலரும் ரவீந்தரை திட்டினர். அதற்கு பயந்து கொண்டு அவர் அந்த பேட்டியை வெளியிடவில்லை. தைரியம் இருந்தால், தில் இருந்தால் ரவீந்தர் அந்த பேட்டியை தற்போது வெளியிடட்டும் என்று வனிதா பேசினார். மேலும் தயாரிப்பாளரிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்பதால் தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ரவீந்திரிடம் அவ்வளவு பணம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஐ.டி ரைடு போனால் ரவீந்திரிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று தெரிந்துவிடும். ரவீந்திரிடம் அவ்வளவு பணம் எதுவும் இல்லை என்று அவர் காமெடியாக கூறினார். மேலும் ரவீந்திரன் மாஸ்டர் பிளான் என்ன என்று எனக்கு தெரியும் என்னிடம் வைத்துக் கொள்ளாதே என்று காமெடியாக ரவீந்தருக்கு மிரட்டலையும் விடுத்தார் வனிதா.