விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நடந்தது குறித்து வனிதா விஜயகுமார் அதிரடி கருத்து..!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. இந்த 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நடந்தது குறித்து வனிதா விஜயகுமார் அதிரடி கருத்து..! 1

வாரத்தின் இறுதி நாட்களில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டி காட்டுவார். தற்போது அதுபோல விஜய் சேதுபதியும் பிரமாதமாக போட்டியாளர்களை போட்டு வறுத்தெடுத்து உள்ளார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி கலக்கி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வனிதா விஜயகுமார், விஜய் சேதுபதி அருமையாக பேசியதாகவும், ஆடியன்ஸ் மனதில் உள்ள அணைத்து கேள்விகளையும் ஒன்றுவிடாமல் போட்டியாளர்களிடம் கேட்டதாக கூறி உள்ளார் வனிதா விஜயகுமார். இதனால் போட்டியாளர்கள் வாயடைத்து போய் பயத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்