பிக்பாஸ் பிரபலங்கள் பலரை அழைத்து வனிதா விஜயகுமார் தனது வீட்டில் வரலட்சுமி பூஜை செய்துள்ளார். அந்த வீடியோவை அவர் தனது youtube வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு பெயர்தான் வனிதா. சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா பிரபல நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளாவார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜயுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் நடிப்பை விட்டு விட்டு தனது சொந்த வாழ்க்கையை பார்க்க தொடங்கினார் வனிதா. அவருக்கு முதலில் சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவருடன் திருமணம் ஆகி விஜய் ஸ்ரீ ஹரி என்கிற ஒரு மகன் இருக்கிறார். ஆனால் முதல் கணவருடன் காதல் வாழ்க்கை கசந்ததால் அவர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இரண்டாவது கணவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பின்னர் இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் வனிதா. தந்தையுடன் சொத்து தகராறு, மகன் ஸ்ரீஹரியை பிரித்து சென்றது, இரண்டு கணவர்களை பிரிந்தது என்று தொடர்ந்து மீடியாக்களில் ஒரு சர்ச்சையான ஆளாகவே அவர் காண்பிக்கப்பட்டார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு சென்றும் அவர் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தார். பின்பு மக்களால் ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்ட பின்னர் பிக்பாஸ் இன் சுவாரசியம் குறைந்ததால், மீண்டும் வனிதாவை உள்ளே கொண்டு வந்து சண்டையை ஆரம்பித்தது பிக்பாஸ் டீம். பின்னர் மீண்டும் மக்களால் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின்பு அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் ஒரே மாதத்தில் கசந்ததால் அவரை விட்டும் விலகி தனியாக வாழ்ந்து வருகிறார் வனிதா.
தனியாக youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் விற்கும் தொழிலையும், ஃபேஷன் உலகின் மேக்கப் சாதனங்கள் விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது வீட்டில் வரலட்சுமி பூஜை ஒன்றை நடத்தி இருக்கிறார் அதற்காக அவர் பிரபலங்கள் பலரையும் தனது வீட்டிற்கு வரவழைத்து அந்த பூஜையை கொண்டாடி இருக்கிறார். அதை தனது youtube பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நம்ம வனிதாவா இது? இப்படி பக்தி பழமாக இருக்கிறார்கள் என்று கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர் நீங்களும் அந்த வீடியோவை காண… watch the below video..
Youtube Video Code Embed Credits: Vanitha Vijayakumar