வாரணம் ஆயிரம் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தான்! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை

வெளியிட்டது

நடிகர் சூர்யா அனைத்து வயதினரான ரசிகர்களைக் கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமான நடிகர் என்றே கூறலாம். இவர் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் வெளியிடப்படும். இவருக்கு ரசிகர்கள் கோலிவுட்டில் மட்டுமில்லை டோலிவுட், மோலிவுட்டிலும் அதிகம் உண்டு. நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி படங்கள் என்றாலே வெற்றிதான்.

வாரணம் ஆயிரம் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தான்! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை 1

அதுமட்டுமல்லாமல், ரசிகர்களும் இந்த கூட்டணியை விரும்புவர். அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த படங்கள் காக்க காக்க, வாரணம் ஆயிரம். வாரணம் ஆயிரம் படம் சூர்யாவின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய படமாகும். இந்த படம் ஏராளமான பிரிவில் விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரணம் ஆயிரம் 2008ல் திரையிடப்பட்டது. தற்போது அந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கிடைத்துள்ளது. யாரும் அறியாத அந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இந்த படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடித்தார். ஒன்று தந்தை கிருஷ்ணனாகவும் மற்றொன்று மகன் சூர்யாவாகவும் நடித்திருந்தார். ஆனால் முதலில் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பதாக இருந்தது. பின்னர், சூர்யா அந்த கதாபாத்திரத்தயும் ஏற்று நடித்தார். அடுத்து சூர்யா கௌதம் வாசுதேவ் மேனனுடன் நவரசா எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்