Categories: சினிமா

வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா?

வெளியிட்டது

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் வம்சி இயற்றி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு, சங்கீதா, கணேஷ் வெங்கட்ராமன் போன்ற பல முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். முதன் முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா? 1
குறிப்பாக ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி பாடலும் 50 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய நிலையில் அம்மாவிற்காக சோல் ஆஃப் வாரிசு என்கிற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த ஆடியோ லான்சை தொகுத்து வழங்குவதற்காக பிக் பாஸ் புகழ் ராஜுவை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அவர் ஆர்வக்கோளாறில் ட்விட்டரில் பகிர்ந்து தேதியையும் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பின்னர் அவசர அவசரமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்தார். இந்த நிலையில் இன்று ஆடியோ லான்ச் நடைபெறும் தேதி டிசம்பர் 24 மாலை 4 மணி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் படக்குழுவுடன் கமலஹாசன், பவன் கல்யாண், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


இந்த நிலையில் வாரிசு படத்தில் புதிய போஸ்டருடன் பாடல்கள் நாளை 04:00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியும் அதில் இருக்கும் மறைமுக அரசியலுக்காகவுமே ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வருவது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் விரைவில் படத்தில் இருந்து டீசர் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு உரிமையை சன் டிவி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்