தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் குறித்த விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் சரத்குமாரின் மூன்றாவது மகனாக இருக்கிறார் விஜய். இவருக்கு ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் என இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவரும் அப்பாவின் பேச்சை தட்டாமல் கேட்கும் மகன்களாக இருக்கிறார்கள். ஆனால் விஜய் மட்டும் தனது கனவுகளுக்காக நடைபோடும் ஒரு மகனாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் சரத்குமார் தன்னுடைய நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் மகன் விஜய்யிடம் ஒப்படைக்க, அதை ஏற்க மறுக்கிறார் விஜய். தனது தந்தையின் சாம்ராஜியத்தை பார்த்துக் கொள்ள விரும்பாத அவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக வீட்டை விட்டு ஒரு கட்டத்தில் வெளியேறுகிறார். வீட்டை விட்டு வெளியேறும் அவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி அந்த தொழில் சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை மற்றும் தாயின் 60-வது கல்யாணத்திற்கு வீட்டிற்கு செல்கிறார் விஜய். அவரிடம் சரத்குமார் குடும்பத்தினர் செய்த சூழ்ச்சியால் தொழிலில் பல சறுக்கல்களை சந்தித்ததாகவும், தனக்கு கேன்சர் இருப்பதால் சில மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்றும், அதனால் தொழிலை பார்த்துக் கொள்ளும்படியும், இழந்த தொழிலை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்று விஜய்யிடம் கோரிக்கை வைக்கிறார். சரத்குமாரின் தொழிலில் ஏன் நஷ்டம் அடைந்தது? அவரது குடும்பத்தினர் செய்த சதி என்ன? அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? சரத்குமார் இழந்த தொழிலை மீண்டும் விஜய் காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் மற்றும் விஜயின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு விஜயை பார்க்க முடிந்தது. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை விஜய் ஒன் மேன் ஆர்மியாக இருந்து இந்த படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். பலர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்த போதிலும், விஜய் தனித்துவமாக தெரிவது சிறப்பாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது. படத்தின் இரண்டாவது பாதி மெதுவாக செல்கிறது. ரஞ்சிதமே பாடல் பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறது. இந்த பாடல் ஒளிபரப்பாகும் பொழுது தியேட்டர் அதிர கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கிறது. யோகி பாபு மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த காமெடி படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் ஆக்ஷன் காட்சிகளில் விஜய்க்கு நிகர் விஜய் தான் என்று நிரூபித்திருக்கிறார். எமோஷன், சென்டிமென்ட், காமெடி, காதல் என அனைத்து கன்டென்ட்களிலும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் விஜய். தந்தைக்கும் மகனுக்குமான உறவு, தாய்க்கும் மகனுக்குமான உறவு என்று ஒரு நல்ல மகனாக அவர் மாஸ் காட்டியிருக்கிறார். ஒரு ஆளாக இருந்து முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். கதாநாயகியாக வரும் ராஷ்மிகாவிற்கு அந்த அளவிற்கு படத்தில் ஸ்கோப் இல்லை. விஜய்க்கும் யோகி பாபுக்குமான காம்பினேஷன் மிக அருமையாக வந்துள்ளது. இருவர் சேர்ந்து செய்யும் காமெடிகள் கைதட்டல்களை பெறுகிறது.
வில்லனாக வரும் பிரகாஷ்ராஜின் நடிப்பு அருமையாக இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வில்லத்தனத்தை காண முடியவில்லை. கில்லி படத்தில் வரும் வில்லதனம் அளவிற்கு கூட இந்த படத்தில் அவரால் கொடுக்க முடியவில்லை. மேலும் விஜயின் அறிவுரையை கேட்டு மனம் திருந்தும் காட்சிகள் சிறிது கிரிஞ்சாக இருக்கிறது. சங்கீதா. ஜெயசுதா, பிரபு, சரத்குமார் என பலரும் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். எஸ் ஜே சூர்யா கேமியோ ரோலில் வந்து அசத்தியிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஷ்பூ கேமியோ ரோலில் வரவில்லை. குடும்பக் கதையை பின்னணியாக கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியதாக இருந்த போதிலும் திரைக்கதை சற்று சொதப்பலாகவே இருக்கிறது. மேலும் ராஷ்மிகாவுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் க்ரிஞ்சாக தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக அரைத்த மாவை தான் அரைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி. இருந்தாலும் ரசிகர்கள் வாரிசு படத்தை பார்த்து ரசித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:
படத்தின் நெகட்டிவ் விஷயங்கள்:
Youtube Video Embed Code Credits: Sun TV