Categories: சினிமா

ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருக்கும் தளபதி.! வாரிசு படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது.!

வெளியிட்டது

வாரிசு படத்தில் இருந்து தற்போது சில ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காட்சிகள் வெளியாகி ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை அள்ளி இருக்கிறது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில், நேற்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜு தயாரித்திருந்தார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குடும்பக் கதையை பின்னணியாக கொண்ட வாரிசு திரைப்படத்தில் தனது தந்தை இழந்த தொழில் சாம்ராஜ்யத்தை கடைசி மகனாக இருக்கும் விஜய் எவ்வாறு மீட்க்கிறார் என்பது குறித்த கதை தான் வாரிசு. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருக்கும் தளபதி.! வாரிசு படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது.! 1
வாரிசு படம் வெளியாகும் முன்பே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனென்றால் இந்த படம் அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு நேரடியாக மோத இருக்கிறது என்று படக் குழு அறிவித்து இருந்தது, அன்று தொடங்கி படம் வெளியாகும் நேற்று வரை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்று படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி தமிழ் நாட்டில் 17 கோடி வசூலை பெற்றிருக்கிறது வாரிசு படம். துணிவு படம் 19 கோடி வசூலை பெற்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது வாரிசு படம். இருந்தபோதிலும் துணிவு படத்தின் உலகளாவிய வசூலை ஓவர் டேக் செய்து 26.5 கோடியுடன் உலக அளவில் வசூலில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து ஸ்னீக் பீக் எனப்படும் சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது.


அந்தக் காட்சியில் ராஷ்மிகா மந்தனாவும் விஜயும் காதலில் விழும் அறிமு காட்சிகளை சிறிய ப்ரோமோ போல் படக் குழு வெளியிட்டு இருக்கிறது் அந்த வீடியோ சில நிமிடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. அந்த வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜய் ஆகிய 3 பேர் செய்யும் காமெடியாக அந்த சீன் அமைந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Embed Code Credits: Moviebuff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்