Categories: சினிமா

பல பாடல்களை சுட்டு வாரிசு “தீ” பாட்டை உருவாக்கிய தமன்? கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.!

வெளியிட்டது

திரைப்படங்களில் பல இசைகள் காப்பியடித்து எடுக்கப்படுவதாக நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை தற்போது முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாரிசு படத்தில் இருந்தும் பாட்டுகள் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடல் வெளியான போது இதே போல் தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதில் மொச்ச கொட்ட பல்லழகி என்ற பாடலும், உன்ன தானே அம்மான்னு எல்லோருக்கும் சொல்லி வச்சேன் என்கின்ற அம்மன் பாடலும் மிக்ஸ் செய்யப்பட்டு இந்த பாடல் எடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் போட்டு கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ஆக வெளியாகி இருக்கும் தீ என்கிற பாடலும் அதே போல் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக விட்டு இணையவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பல பாடல்களை சுட்டு வாரிசு "தீ" பாட்டை உருவாக்கிய தமன்? கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.! 1

 

விஜய் படத்திற்கு முதன்முறையாக தமன் இசை அமைத்திருக்கிறார். வாரிசு படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படம் தல அஜீத்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பாடலின் இரண்டாவது சிங்கிளான தீ என்கிற பாடலை தற்போது தெலுங்கு ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். அதாவது நான் ஈ படத்தில் வெளியான நான் ஈ என் பேரு என்கிற பாடலை அப்படியே காப்பி அடித்து மெட்டுகளை போட்டு இருப்பதாக தமன் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதேபோல விவேகம் படத்தில் இடம்பெறும் தலை விடுதலை என்கிற வரிகளை அப்படியே சுட்டு தீ தளபதி என்று மாற்றி விட்டதாகவும் அஜீத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

அடுத்தபடியாக நானும் ரவுடிதான் படத்தில் வரும் வரவா வரவா உன்ன துரத்தி வருவாய் என்கிற பாடலின் காபி தான் தீ தளபதி பாடல் என்று தற்போது ஆதாரங்களுடன் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த வீடியோக்களை பகிர்ந்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு ரசிகர்களும் தமனை வீடியோ ஆதாரங்களுடன் ஆதாரங்களை போட்டு மரணமாக கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Video Code Embed Credits: Jaya Plus

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்