Categories: சினிமா

இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே.! மரண மாஸாக வெளியானது “வாரிசு படத்தின் ட்ரைலர்..! | Varisu Official Trailer

வெளியிட்டது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் 66-வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் குஷ்பூ, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்துள்ள விஜய்க்கு கடைசியாக அமைந்த பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. எனவே மிக கவனத்துடன் தனது அடுத்த கதையை தேர்ந்தெடுத்து விஜய் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 67வது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் அவர் இணைகிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே.! மரண மாஸாக வெளியானது "வாரிசு படத்தின் ட்ரைலர்..! | Varisu Official Trailer 1
இந்த நிலையில் வாரிசு படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாக தொடங்கியது. வாரிசு படத்தின் படப்பிடிப்புகளில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்திலிருந்து ஏற்கனவே ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் ரசிகர்கள் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர். நேற்று படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியான நிலையில், படத்தின் ட்ரைலரும் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நேற்று ட்ரைலர் வெளியாகவில்லை. நாளை மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்திருந்தனர்.


இதனால் தளபதி ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்தனர். நேற்று காலை முதலே வாரிசு ட்ரெய்லர் என்கிற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங் செய்ய தொடங்கினர். தற்போது இணையத்தில் 1,00,000 அதிகமானோர் வாரிசு ட்ரைலர் என்று டேக் செய்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வாரிசு ஹேஷ்டேக் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிரடியாக வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்