Categories: சினிமா

வசந்த் ரவி, சத்யராஜ் ஆகியோர் ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ள வெப்பன் (Weapon) டீசர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வெப்பன். தற்போது அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்சன் திரில்லராக உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இந்த டீசர் வெளியாகியிருக்கிறது. ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒருவனின் வாழ்க்கையை சொல்வது போன்ற கதையாக இது உருவாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் ஒரு திரைப்படம் தான் வெப்பன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வசந்த் ரவி, சத்யராஜ் ஆகியோர் ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ள வெப்பன் (Weapon) டீசர் வெளியானது.! 1

ஆயுதங்களால் அழிக்கவே முடியாத அபூர்வ சக்தி கொண்ட ஒரு மனிதனை அழிக்க எடுக்கும் முயற்சியும், அந்த முயற்சி படித்ததா இல்லையா என்பது குறித்த கதை தான் இந்த படம் என்பது இந்த டீசரைப் பார்க்கும் பொதே தெரிய வருகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எந்த ஒரு ஆயுதத்தை வைத்தும் அவனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் அவன் ஒரு சூப்பர் ஹுயூமன் என்கிற வசனம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி பிரபலம் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: T-Series Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்