தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த இவர் தற்போது முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கர்ணன் , மாமன்னன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். இவருக்கு அடுத்ததாக வாழை படம் வெளியாக உள்ளது . இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நிகிலா விமல் , கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்து உள்ளனர் . இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார் . இப்படத்தில் இருந்து ஏற்கனவே பாடல் வெளியாகி இருந்த நிலையில் , தற்போது அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது .
Embed Video Credits : THINK MUSIC INDIA