Categories: சினிமா

‘வீரம்’ படத்துல நடிச்ச இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்க னு பாருங்க.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் போல் ஜொலிக்கிறார் நடிகை யுவினா அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வீரம்' படத்துல நடிச்ச இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்க னு பாருங்க.! 1

2013ம் ஆண்டு வெளியான ‘இவன் வேற மாதிரி’ என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் யுவினா.

பிறகு 2014ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார்.

இறுதியில் தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த விஜயின் ‘சர்க்கார்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில நாட்களாக படங்களில் நடிக்காமல் காணாமல் போய் இருந்த யுவினாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்கு வளர்ந்து ஹீரோயின் போல மாறியிருக்கிறார் யுவினா. இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது அங்கு வருகை தந்த யுவினாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

‘வீரம்’ படத்தில் நடித்த அந்தக் குழந்தையா இது? என்று பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ தமிழ் திரையுலகிற்க்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் அவரது புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்