கோமாளிகளை ஏன் அடிக்கிறீங்க? நீங்க பண்றத பாத்தாலே எரிச்சல் தான் வருது.! பட்டை விளாசிய மலேசிய பெண்.!

வெளியிட்டது

கோமாளிகளை மரியாதையாக நடத்துங்கள் அவர்கள் மீது பொருட்களை தூக்கி எறிவது மரியாதை இல்லாமல் எங்களுக்கு தெரிகிறது என்று மலேசியாவில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவர் வெங்கடேஷ் பட்டுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் அவருக்கு காட்டமாக பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னோடியாக சமையல் சமையல் என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது வெங்கடேஷ் பட் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். அப்போதெல்லாம் மிகவும் கண்டிப்பான நடுவராக அவர் இருந்தார். தவறு என்றால் தவறை முகத்துக்கு நேராக நேரடியாக சொல்லிவிடும் நடுவராக பட் இருந்தார்.

கோமாளிகளை ஏன் அடிக்கிறீங்க? நீங்க பண்றத பாத்தாலே எரிச்சல் தான் வருது.! பட்டை விளாசிய மலேசிய பெண்.! 1
அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் வெங்கடேஷ் பட்டை பார்த்தாலே பயப்படும் அளவிற்கு இருந்தனர். பின்னர் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் வெங்கடேஷ் பட் தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டார். கோமாளிகளுடன் சேர்ந்து அவரும் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார். ஆனால் வெங்கடேஷ் பட் மீது ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. கோமாளிகளை அவர் தொடர்ந்து அடிக்கிறார் என்பதுதான். முதல் இரண்டு சீசன்களில் இல்லாத அளவிற்கு சீசன் 3 யில் அவர் மீது மிகுந்த விமர்சனம் வந்தது. கோமாளியாக வந்த பரத்தை அவர் மிகவும் கடுமையாக அடிக்கிறார் என்று அவர் மீது விமர்சனம் வந்தது. இதற்கு பரத்தே அவர் என்னை வேண்டுமென்றே அடிக்கவில்லை, இது ஒரு காமெடி நிகழ்ச்சி காமெடிக்காக செய்யப்படுவது என்று பலமுறை விளக்கம் அளித்த போதிலும் நெட்டிசன்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை முன் வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் youtube சேனல் ஆரம்பிக்க இருப்பதாக வெங்கடேஷ் பட் சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த பதிவின் கீழே மலேசிய தமிழ் பெண் ஒருவர் வெங்கடேஷ் பட் மீது மிகுந்த காட்டமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் நான் மலேசியாவில் இருக்கும் குக் வித் கோமாளியின் ரசிகை நீங்கள் கோமாளிகளை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலூட்டுகிறது. பார்வையாளர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருங்கள், கோமாளிகள் மீது பொருட்களை தூக்கி எறிவதை முதலில் நிறுத்துங்கள். மரியாதை கொடுத்து மரியாதை வாங்க கற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் சொல்வது போல இது விளையாட்டுக்காக இருந்தாலும் மலேசியாவில் வசிக்கும் எங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முடிந்த அளவிற்கு சீக்கிரம் உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.


அதற்கு கீழே பதிவிட்டிருக்கும் வெங்கடேஷ் பட் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இது ஒரு காமெடி நிகழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். கவுண்டமணியிடம் சென்று செந்திலை அடிக்காதீர்கள் என்று சொல்ல முடியுமா? அல்லது சார்லி சாப்ளின் இடம் சென்று அடிவாங்காதே என்று சொல்ல முடியுமா? இல்லை ஜெர்ரி டாமை எரிச்சலூட்டுவதை தான் நிறுத்த முடியுமா? கொஞ்சமாவது வளருங்கள், இது ஒரு நிகழ்ச்சி. நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் விஷத்தை குடிப்பீர்களா? உங்களுக்கென்று சுயபுத்தி இல்லையா? என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். இருந்தபோதிலும் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்து கொண்டேதான் இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்