Categories: சினிமா

கல்லீரல் பாதிப்பு..ஆபரேஷன்க்கு கூட பணம் இல்லை..ICUவில் உயிருக்கு போராடும் வெங்கல் ராவ்…உதவி செய்வாரா வடிவேலு

வெளியிட்டது

இன்று திரையில் பெரிய அளவில் நடிக்காத போதும் கூட நம்மை எல்லாம் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. தனது திறமை மற்றும் நகைச்சுவை உணர்வாலும், உடல் மொழியாலும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார் வடிவேலு. எந்தவித சினிமா பின்புலமும் இல்லமால் சுயமாக வளர்ந்து இந்த உயரத்திற்கு சென்றுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. வடிவேலுவுக்கு முக்கிய பலமாக இருந்தவர்கள் அவருடன் நடித்த காமெடி டீம் ஒன்று. அல்வா வாசு, போண்டா மணி, வெங்கல் ராவ் போன்ற பலர் அவருடன் இணைந்து காமெடி செய்து வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கல்லீரல் பாதிப்பு..ஆபரேஷன்க்கு கூட பணம் இல்லை..ICUவில் உயிருக்கு போராடும் வெங்கல் ராவ்...உதவி செய்வாரா வடிவேலு 1

இதில் வெங்கல்ராவ் நாம் அனைவரும் அறிந்த ஒருவரே. ஒரு படத்தில் கொரில்லா சிறையில் ஏய் என்ன அப்படி பாக்குற? என்ற காமெடியிலும், வடிவேலு டாக்டராக இருக்கும் படத்தில் என்னயா புளியோதரை பொட்டலம் மாதிரி போடுற என்ற காமெடியிலும், டேய் உன்ன பாத்தா டாக்டர் மாதிரி தெரியல டா எமன் மஃப்டில வந்த மாதிரி இருக்கு, உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் 6 ரூபாய் போன்ற காமெடிகளில் வடிவேலுவுடன் இணைந்து நடித்தவர். இது போல 30 படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் சண்டை பயிற்சியாளராக இருந்து பின்னர் காமெடிக்கு வந்தார். விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த இவர், காலில் ஏற்பட்ட விபத்தினால் சண்டையாளாராக நடிக்க முடியாமல் காமெடி பக்கம் வந்தவர்.

வடிவேலு சில காலம் சினிமா வாய்ப்பில்லாமல் ஒதுங்கியிருந்த காலத்தில் இவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார். தற்போது வடிவேலுவுக்கு படங்கள் வாய்ப்பு வரும் நிலையில் வெங்கல்ராவுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார் வெங்கல். வயிறு வலியால் பாதிக்கப்பட்ட அவரை விஜயவாடா மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும், கல்லீரல் பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தற்போது ஐசியூவில் இருப்பதாகவும் அவர் மகள் கூறியுள்ளார். அவர் விரைந்து நலம் பெற நாமும் வேண்டிக் கொள்வோம். அவரது வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…

Youtube Video Code Embed Credits: Cineulagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்