விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ்.! இனிமேல் இவருக்கு பதில் இவர்.! வெளியான புது தகவல்

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமார் இயக்கும் “கிழக்கு வாசல்” என்கிற சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஒருவர் கமிட் ஆகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் நண்பனான சஞ்சீவ் இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது புதிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை என்றாலே சன் தொலைக்காட்சிதான் என்று இருந்த நிலைமை மாறி, தற்போது ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகள் சின்னத்திரை நாடகங்களை ஒளிபரப்பி வருகின்றனர். இந்த மூன்று தொலைக்காட்சிகளுக்கு கொள்ளும் டிஆர்பி ரேட்டிங்கில் யார் முந்துவது என்கிற போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்து வரும் ராதிகா சரத்குமார் தற்போது சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிழக்கு வாசல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலை ராதிகாவே தயாரித்து நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ்.! இனிமேல் இவருக்கு பதில் இவர்.! வெளியான புது தகவல் 1
இந்த சீரியலில் ராதிகாவிற்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருக்கிறார். மேலும் ஹீரோவாக நடிகர் விஜயின் நண்பரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் கலக்கிய சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சீரியல் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே சஞ்சீவ் நாடகத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. சமீபத்தில் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இதில் கூட சஞ்சீவ் கலந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென சஞ்சீவ் நாடகத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியானது. சூட்டிங் ஆரம்பித்து ஒளிபரப்பு துவங்குவதற்கு முன்பே நடிகர் ஒருவர் விலகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சஞ்சீங் இடத்தில் எந்த நடிகர் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். பழனியில் பிறந்து வளர்ந்த வெங்கட் ரங்கநாதன் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கினார். ஒரு சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறார் வெங்கட் ரங்கநாதன். இருந்தாலும் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்னமோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இந்த தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார். இத்தனை வருடங்களாக ஹீரோ வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த வெங்கட்டுக்கு தற்போது கிழக்கு வாசல் நாடகத்தின் மூலமாக ஹீரோ வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் வெங்கட்டுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்